மணிப்பூரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

கோப்புப்படம்
துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் 22 மாதங்களுக்கும் மேலாக மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ஐகேஜாங் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
Related Tags :
Next Story