அரசியல் சாசன தினம்; பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டில் இன்று உரை


அரசியல் சாசன தினம்;  பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டில் இன்று  உரை
x
தினத்தந்தி 26 Nov 2024 1:51 AM IST (Updated: 26 Nov 2024 1:54 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் சாசன தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட்டிலும் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. அதேநேரம் இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட 75-வது ஆண்டு ஆகும். எனவே கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு இந்த நாளை கொண்டாடுகிறது.இதையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த இடத்தில்தான் அரசியல் நிர்ணய சபை, நாட்டின் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்வு நடந்தது. அரசியல் சாசன தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட்டிலும் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாக கட்டிடத்தில் உள்ள அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.


Next Story