மராட்டியத்தில் தபால் வாக்கை சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
தபால் வாக்கு சீட்டை போலீஸ்காரர் கணேஷ் ஷிண்டே சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தாக கூறப்படுகிறது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் போலீஸ்காரர் கணேஷ் ஷிண்டே அஸ்தி தொகுதிக்கான தபால் ஓட்டை மலபார்ஹில் வாக்குப்பதிவு மையத்தில் செலுத்தினார். அவர் வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு சீட்டை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
தபால் வாக்கு சீட்டை போலீஸ்காரர் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக மலபார்ஹில் தேர்தல் அதிகாரியிடம் புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி வாக்கு சீட்டை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த போலீஸ்காரர் கணேஷ் ஷிண்டே மீது காவ்தேவி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story