தாஜ்மகாலில் மழைநீர் கசிவு மத்திய அரசு தகவல்


தாஜ்மகாலில் மழைநீர் கசிவு மத்திய அரசு தகவல்
x

கடந்த செப்டம்பர் மாதம் ஆக்ராவில் பெய்த மழை காரணமாக தாஜ்மகாலில் மழைநீர் கசிவு ஏற்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று தாஜ்மகால் தொடர்பாக உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக மத்திய கலாசார மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்தார்.

அதில் அவர், கடந்த செப்டம்பர் மாதம் ஆக்ராவில் பெய்த மழை காரணமாக தாஜ்மகால் பிரதான சமாதி பகுதியின் மேற்கூரையில் சிறிய விரிசல் ஏற்பட்டது. இதனால் மழை நீர்த்துளிகள் கசிந்தது. நவீன ஸ்கேனிங்கை பயன்படுத்தி விரிவான ஆய்வுக்குப் பிறகு, நீர் ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று கூறியிருந்தார்.


Next Story