டெல்லியில் மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை - பிரதமருக்கு கெஜ்ரிவால் பதிலடி


டெல்லியில் மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை - பிரதமருக்கு கெஜ்ரிவால் பதிலடி
x

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை பட்டியலிட 2 அல்லது 3 மணி நேரம் போதாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆளும் ஆம் ஆத்மி அரசு மற்றும் முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார்.

இதற்கு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்து உள்ளார். பிரதமர் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, 'மோடிஜி தனது 43 நிமிட உரையில் 39 நிமிடங்கள் டெல்லி மக்களையும், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையும் சபிக்கவே செலவிட்டார்' என சாடினார். மேலும் அவர், 'டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை பட்டியலிட 2 அல்லது 3 மணி நேரம் போதாது. மறுபுறம் மத்திய பா.ஜனதா அரசு இங்கே எதுவும் செய்யவில்லை. அப்படி எதுவும் செய்திருந்தால், அதைப்பற்றி மோடி பேசியிருப்பார், இப்படி சாபம் போட்டிருக்கமாட்டார்' என்றும் கூறினார்.

தனக்காக வீடு கட்டாமல், நாட்டு மக்களுக்காக வீடு கட்டி வருவதாக பிரதமர் மோடி கூறியது குறித்து கெஜ்ரிவால் பேசும்போது, 'ரூ.2,700 கோடியில் வீடு, ரூ.10 லட்சத்தில் உடை, ரூ.8,400 கோடி விமானத்தில் பயணிப்பவர் இதைப்பற்றி பேசுவதில் நியாயம் இல்லை' என தெரிவித்தார்.


Next Story