பட்ஜெட் 2025: தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றம்.. ரூ.12 லட்சம் வரை வரி கிடையாது


தினத்தந்தி 1 Feb 2025 1:38 AM (Updated: 1 Feb 2025 9:10 AM)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

டெல்லி,

Live Updates

  • 1 Feb 2025 7:10 AM

    புதிய வரி விதிப்பின் கீழ் புதிய வரி அடுக்குகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    அதன் விவரம்:

    ஆண்டு வருமானம் வரி விகிதம்
    ரூ.0-4 லட்சம் இல்லை
    ரூ.4-8 லட்சம் 5 சதவீதம்
    ரூ.8-12 லட்சம் 10 சதவீதம்
    ரூ.12-16 லட்சம் 15 சதவீதம்
    ரூ.16-20 லட்சம் 20 சதவீதம்
    ரூ.20-24 லட்சம் 25 சதவீதம்
    ரூ.24 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்

    ஆண்டு வருமானம் 12 லட்சம் வரை உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட வரி முறையின் கீழ் வரிக் கணக்கை தாக்கல் செய்து வரிக்கழிவு தொகையை திரும்ப பெற முடியும். 

  • 1 Feb 2025 7:00 AM

    வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக அரசுக்கான வரி வருவாய் குறையும். நேரடி வரிகளில் ரூ.1 லட்சம் கோடி, மறைமுக வரிகளில் ரூ.2,600 கோடி குறையும்.

  • 1 Feb 2025 6:49 AM

    தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரி முறையில் ரூ. 12 லட்சம் வரை இனி வரி கிடையாது. கூடுதலாக ரூ. 75 ஆயிரம் கழிவும் வழங்கப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 1 Feb 2025 6:44 AM

    வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக அதிகரிப்பு - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

  • 1 Feb 2025 6:42 AM

    வருமானவரி கால அவகாசம் நீட்டிப்பு

    வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

  • 1 Feb 2025 6:39 AM

    தாய்மொழியில் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 1 Feb 2025 6:33 AM

    லித்தியம் பேட்டரிக்கு சுங்க வரி குறைப்பு

    லித்தியம் பேட்டரிக்கு சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது என நிதி மந்திரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

  • 1 Feb 2025 6:30 AM

    பீகாரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

  • 1 Feb 2025 6:29 AM

    நகர்புற சவால்களை சந்திக்க 2025-26 நிதியாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

  • 1 Feb 2025 6:27 AM

    ரூ. 500 கோடியில் செயற்கை நுண்ணறிவு கல்வி மையங்கள் அமைக்கப்படும் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்


Next Story