பீகாரில் பாலம் இடிந்து விழுந்தது... மீண்டும் சம்பவம்


பீகாரில் பாலம் இடிந்து விழுந்தது... மீண்டும் சம்பவம்
x
தினத்தந்தி 28 Jun 2024 12:29 AM GMT (Updated: 28 Jun 2024 12:33 AM GMT)

பீகாரில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களை இணைக்கும் வகையில் பஹதுர்கஞ்ச் பகுதியில் மதியா ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் பயன்பட்டுக்காக திறக்கப்பட்ட இந்த பாலம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கனமழையால் ஆற்றில் நீரோட்டம் திடீரென அதிகரித்ததாகவும், அதன் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்த மாவட்ட கலெக்டர் துஷார் சிங்லா, பாலத்தை பழுது பார்க்கும் பணிகள் உடனடியாக தொடங்கியுள்ளதாக கூறினார்.

முன்னதாக கடந்த வாரம் பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட 3 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்தது, பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story