தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஆக்ரா,
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலைப் பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் தினந்தோறும் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாஜ்மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக உத்தரபிரதேச சுற்றுலாத்துறையின் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து தாஜ்மஹால் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.
சோதனை முடிவில், வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் புரளி என தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story