அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாஜக அலுவலகம் புல்டோசர் கொண்டு இடிப்பு


அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாஜக அலுவலகம் புல்டோசர் கொண்டு இடிப்பு
x

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாஜக அலுவலகம் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பாலியா நகரில் பாஜக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டநிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பாஜக அலுவலகம் கட்டப்பட்டது உறுதியாது.

இதையடுத்து, அதிகாரிகள் நேற்று பாஜக அலுவலகத்தை புல்டோசர் கொண்டு இடித்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாவட்ட பாஜக தலைவர், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக அலுவலகம் உள்லதாகவும், அது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story