டெல்லி குற்றங்களின் தலைநகரமாக மாறி உள்ளது - மத்திய அரசு மீது கெஜ்ரிவால் தாக்கு


டெல்லி குற்றங்களின் தலைநகரமாக மாறி உள்ளது -  மத்திய அரசு மீது கெஜ்ரிவால் தாக்கு
x

டெல்லியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகரமான டெல்லியில் உள்ள பள்ளிகள், விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனை தொடர்ந்து டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி நிறுவனருமான கெஜ்ரிவால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் 'மத்தியில் உங்களுடைய ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும் நாட்டின் தலைநகரமான டெல்லி குற்றங்களின் தலைநகரமாக மாறி உள்ளது. சட்டம்-ஒழுங்குநிலை சீர்கெட்டு கிடக்கிறது. பலாத்காரம், போதை பொருள் கடத்தல், மாபியா மற்றும் குண்டர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முறையான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட முயற்சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யவும் இல்லை' என்றுள்ளார்.


Next Story