டெல்லி சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக


டெல்லி சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
x

டெல்லி சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 29 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. தற்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ரா டெல்லியின் கர்வால் நகர் தொக்தியில் களமிறங்க உள்ளார். சமீபத்தில் ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் இருந்த பிரியங்கா கவுதம், கொண்ட்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Next Story