குளிக்க சென்ற இளம்பெண் பலாத்காரம் - அசாம் வாலிபர் கைது


குளிக்க சென்ற இளம்பெண் பலாத்காரம் - அசாம் வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2025 7:22 PM (Updated: 29 Jan 2025 7:25 PM)
t-max-icont-min-icon

இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு லே-அவுட்டில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் வீட்டின் அருகேயே அசாம் மாநிலத்தை சேர்ந்த மன்சூர் ஆலம் (வயது 24) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு இளம்பெண் குளிப்பதற்காக சென்றார்.

அவர் குளித்து விட்டு வெளியே வரும் சந்தர்ப்பத்தில் அங்கு வந்த மன்சூர் ஆலம், இளம்பெண்ணை தன்னுடைய வீட்டுக்குள் குண்டு கட்டாக தூக்கி சென்றதாக தெரிகிறது. பின்னர் தன்னுடைய வீட்டில் வைத்து இளம்பெண்ணை அவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர்.

உடனே வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிச் செல்ல முயன்ற மன்சூர் ஆலமை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்து பிடதி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். அவரை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், மன்சூர் ஆலம் ராமநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பலாத்காரத்திற்கு உள்ளான பெண் ரத்த காயங்களுடன் இருந்தார். அவரை பெண் போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான மன்சூர் ஆலம் மீது பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பிடதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story