அசாம்:10 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று


அசாம்:10 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று
x

அசாம் திப்ருகார் மாவட்டத்தில் 10 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திஸ்பூர்,

கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன்எச்.எம்.பி.வி எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. சிறுவர்கள், இந்த தொற்று பாதிப்பிற்கு அதிகம் ஆளாகிவரும் நிலையில் உள்ளது. சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எச்.எம்.பி.வி தொற்று இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது.

இந்தியாவில் முதலில் பெங்களூருவில் மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு உறுதியானது. அதை தொடர்ந்து, அசாம் திப்ருகார் மாவட்டத்தில் 10 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அசாம் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:-

எச்எம்பிவி பாதிக்கப்பட்ட குழந்தை திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருக்கிறது. அசாமில் பதிவான முதல் எச்எம்பிவி தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது. புதிதாக எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story