ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மறைவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்


ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மறைவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்
x

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகி மறைவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் குர்பிரீத் கோகி பஸ்ஸி. லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் இன்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரது மறைவுக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

லூதியானாவின் எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகி பஸ்ஸியின் அகால மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது மக்களுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்துடன் சேவை செய்த ஒரு தலைவர், அவரது மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

இந்த கடினமான நேரத்தில் துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்கள் வலிமையையும் ஆறுதலையும் பெறட்டும். இந்த ஆழ்ந்த இழப்பின் தருணத்தில் அவரது குடும்பத்தினருடனும் லூதியானா மக்களுடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அவரது சேவை மரபு எப்போதும் நினைவுகூரப்படும் என பதிவிட்டுள்ளார்.


Next Story