திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு
x

திருமலையில் வசிக்கும் உள்ளூர்மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையைக் காண்பித்து சாமி தரிசன டோக்கன்களை பெறலாம்.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முதல் கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி அன்னமய பவனில் நடந்தபோது, ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணியளவில் திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கம், திருமலை பாலாஜி நகர் சமுதாயக்கூடம் (கம்யூனிட்டி ஹால்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில் சாமி தரிசனத்துக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

திருப்பதி நகர்ப்புறம், திருப்பதி கிராமம், சந்திரகிரி மற்றும் ரேணிகுண்டா மண்டலங்கள், திருமலையில் வசிக்கும் உள்ளூர்மக்கள் தங்களுடைய அசல் ஆதார் அட்டையைக் காண்பித்து சாமி தரிசன டோக்கன்களை பெறலாம்.

மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.


Next Story