மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல்
மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்டத்தில் உள்ள பேச்சி சிங்லாக் மலையடிவாரத்தில் நேற்று பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளில் 3 கைக்குண்டுகள், 4 தோட்டாக்கள், ஒரு பயோனெட் மற்றும் ஒரு வானொலி பெட்டி ஆகியவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இம்பால் பள்ளத்தாக்கை தளமாக கொண்ட மெய்தி மற்றும் அதை ஒட்டிய மலைப்பகுதியை சார்ந்த குக்கி குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.