ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா கோலாகலம்: பிரபலங்கள் பங்கேற்பு


தினத்தந்தி 12 July 2024 9:15 PM IST (Updated: 13 July 2024 12:27 AM IST)
t-max-icont-min-icon

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சியை ஒட்டி மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மும்பை,

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சியை ஒட்டி மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தநிலையில், அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

Live Updates

  • 12 July 2024 9:26 PM IST

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. மராட்டிய மாநிலம் மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டர் இந்த திருமணம் தொடர்பான சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் தங்களது இளைய மகனின் திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதாவது, உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

    தனது மகனின் திருமணத்திற்காக மட்டும் பல லட்சக்கணக்கான கோடிகளை அம்பானி செலவழித்து வருகின்றார். மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் வீட்டுக் கல்யாணம் என்பதால் வெளிநாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் அனைத்து பிரபலங்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.


Next Story