வாடகை வீட்டில் குடியிருந்த ஆட்டோ டிரைவருடன் கள்ளக்காதல்.. அடுத்து நடந்த விபரீதம்


வாடகை வீட்டில் குடியிருந்த ஆட்டோ டிரைவருடன் கள்ளக்காதல்.. அடுத்து நடந்த விபரீதம்
x

ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவதாக ஆட்டோ டிரைவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 37 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் தனது வீட்டை ரவுடி சுரேஷ் என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். தன்னை ஆட்டோ டிரைவர் என கூறி சுரேஷ் வாடகை வீட்டுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த பெண்ணுக்கும், சுரேசுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே ஆத்திரமடைந்த சுரேஷ், அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அத்துடன் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆபாச புகைப்படங்களை சுரேஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுரேசை பற்றி விசாரித்த போது தான், அவர் ரவுடி என்பதும், தற்போது கொலை முயற்சி வழக்கில் துமகூரு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் பெண்ணுக்கு தெரியவந்தது. இதுபற்றி பேடரஹள்ளி போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரவுடி சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறையில் உள்ள சுரேசை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story