மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 55 கோடி பக்தர்கள் புனித நீராடல்


மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 55 கோடி பக்தர்கள் புனித நீராடல்
x

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் 55 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் 55 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா வரும் 26ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் அதற்குள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story