குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 48 பேர் கைது
குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அகமதாபாத்தில் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 250 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் 48 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து சட்டவிரோதமாக குடியேறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 48 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story