280 கி.மீ. வேகத்தில் செல்லும் ரெயில் விரைவில் அறிமுகம்-மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் பா. ஜனதா உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோர் கேட்ட கேள்விக்கு ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:-
இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ரெயில்வே துறை அதிவேக ரெயில்களை தயாரித்து வருகிறது. இந்த ரெயில்களை சென்னையில் உள்ள ஐசிஎப், பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து தயாரித்து வருகிறது. இது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு ரெயில் தயாரிக்க சுமார் ரூ.28 கோடி (வரி தவிர) செலவாகும்" என்றார்.
Related Tags :
Next Story