பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்


பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
x

பள்ளி சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டம் தண்டாராம்கர் பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 15 வயது சிறுமி படித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கடந்த சனிக்கிழமை மாலை சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமியை அவரது வீட்டின் அருகே விட்டுவிட்டு பைக்கில் தப்பிச்சென்றுள்ளார்.

தனக்கு நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆசிரியரை தீவிரமாக தேடி வருகின்றார்.


Next Story