தலைமை ஆசிரியரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவன் - மத்திய பிரதேசத்தில் பயங்கரம்
மத்திய பிரதேசத்தில் தலைமை ஆசிரியரை 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.கே.சக்சேனா (55), இன்று மதியம் 1.30 மணியளவில் பள்ளியின் கழிவறை அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 5 ஆண்டுகள் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த எஸ்.கே.சக்சேனாவை, அதே பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக் கொலை செய்துள்ளான்.
இந்த கொலையை நிகழ்த்துவதற்கு அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவனும் உதவி செய்ததாக கூறப்படுகிறது. தலையில் சுடப்பட்ட எஸ்.கே.சக்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமை ஆசிரியரை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது இருசக்கர வாகனத்தில் இரண்டு மாணவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய 2 மாணவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story