மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை


மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை
x

எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் துறைமுகம், சிப்பிங் மற்றும் வாட்டர்வேஸ் துறையின் கீழ் இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் பல்வேறு பிரிவுகளில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம்:

மெக்கானிக்கல்- 20, எலக்ட்ரிக்கல்- 4, எலெக்ட்ரானிக்ஸ்- 2, கடற்படை கட்டிடக்கலை- 6, சிவில்- 3, தகவல் தொழில்நுட்பம்- 2, மனித வளம்- 4, நிதி- 3

காலிப் பணியிடங்கள்: 44

வயது வரம்பு:

06.01.2025 தேதியின்படி அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 07.01.1998 தேதியில் அல்லது அதற்கு பிறந்தவரா இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

ஓ.பி.சி(OBC)- 3 ஆண்டுகள்

எஸ்.சி/எஸ்.டி(SC/ST)- 5 ஆண்டுகள்

கல்வித்தகுதி:

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கடற்படை கட்டிடக்கலை, சிவில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

மனித வளம் மற்றும் நிதி பிரிவிற்கு துறை சார்ந்த பாடப்பிரிவில் முதுகலை பட்டம், சிஏ உள்ளிட்டவை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: ரூ.40,000- ரூ. 80,280

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

நிலை 1: ஆன்லைன் தேர்வு

நிலை 2 : குழு கலந்துரையாடல், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

மற்ற பிரிவினர் ரூ.1,000 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.01.2024

இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story