பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை


பாரத் எலெக்ட்ரானிக்ஸ்  நிறுவனத்தில் வேலை
x

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் மின்னணுவியல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) புராஜெக்ட் இன்ஜினீயர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 78

பணி:

I) கள செயல்பாட்டு பொறியாளர் (IT பாதுகாப்பு மற்றும் சொத்து மேலாளர்)-6

சம்பளம்: ரூ.80,000,

வயது: 45-க்குள் இருக்க வேண்டும்,

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ./பி.இ/பி.டெக் தேர்ச்சியுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450.

II). பணி : கள இயக்க பொறியாளர்

அ) பிரிவு:டி.சி சப்போர்ட் (DC Support)-4

ஆ) : ஐ.டி (IT Support Staff)-37

சம்பளம்: ரூ.60,000,

வயது: 40-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஐ.டி/சி.எச்/இசிஇ/மின்னணுவியல் பிரிவில் பி.இ/பி.டெக் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450

III). பணியின் பெயர்: திட்ட பொறியாளர் - I

அ) உள்ளடக்க எழுத்தாளர்(Content writer)-1

ஆ)ஐ.டி உதவி மைய ஊழியர்கள் (IT Help Desk Staff)-12

சம்பளம்: ரூ.40,000

வயது: 32-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஐ.டி/சி.எச்/இசிஇ/மின்னணுவியல் பிரிவில் பி.இ/பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400

IV). பணியின்பெயர் : பயிற்சி பொறியாளர்-I (District Technical Support)-18

சம்பளம்: ரூ.30,000

வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஐ.டி/சி.எச்/இசிஇ/மின்னணுவியல் பிரிவில் பி.இ/பி.டெக் தேர்ச்சியுடன் ஓர் ஆண்டு பணி அனுபவம் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் - ரூ. 150.

வயது தளர்வு :

எஸ்சி/எஸ்டி (SC/ ST) பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள்

ஓபிசி (OBC) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைன் மூலம் எஸ்பிஐ (SBI)வங்கியில் செலுத்த வேண்டும். SC/ST பிரிவினர் மற்றும் PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: http://bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தொடக்க தேதி:06.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.11.2024


Next Story