யு.பி.எஸ்.சி: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு; 457 காலிப்பணியிடங்கள்....
தேசிய பாதுகாப்பு அகாடமியில் 457 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி, விமானப்படை அகாடமி மற்றும் கடற்படை அகாடமி,அதிகாரிகள் பயிற்சி அகாடமி (National Defence Academy,Officers Training Academy,Air Force Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 457 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியின் விவரம்:
இந்திய ராணுவ அகாடமி - 100, இந்திய கடற்படை அகாடமி - 32, விமானப்படை அகாடமி - 32,அதிகாரிகள் பயிற்சி அகாடமி (123வது SSC ஆண்கள்) – 275, அதிகாரிகள் பயிற்சி அகாடமி (37வது SSC பெண்கள்) - 18
காலிப்பணியிடங்கள்:457
வயது வரம்பு :
ஐ.எம்.ஏ/ஐ.என்.ஏ: 02.01.2002 மற்றும் 01.01.2007 க்கு இடையில் பிறந்த திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
விமானப்படை அகாடமி: 01.01.2026 ன் படி 20–24 ஆண்டுகள் (செல்லுபடியாகும் வணிக விமானி உரிமத்துடன் 26 ஆண்டுகள் வரை தளர்த்தப்பட்டுள்ளது).
அதிகாரிகள் பயிற்சி அகாடமி(OTA) ஆண்கள்: 02.01.2001 மற்றும் 01.01.2007 க்கு இடையில் பிறந்த திருமணமாகாத ஆண்கள்.
அதிகாரிகள் பயிற்சி அகாடமி(OTA) பெண்கள்: 02.01.2001 மற்றும் 01.01.2007 க்கு இடையில் பிறந்த திருமணமாகாத பெண்கள், விதவைகள் அல்லது விவாகரத்து பெற்றவர்கள்.
கல்வி தகுதி:
ஐ.எம்.ஏ மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கடற்படை அகாடமி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பொறியியல் பெற்றிருக்க வேண்டும்.
விமானப்படை அகாடமி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் (10+2 அளவில் இயற்பியல் மற்றும் கணிதத்துடன்) அல்லது பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,எஸ்.எஸ்.பி (SSB) நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
மற்ற பிரிவினர்(Others) ரூ.200 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.
எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினர்,பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பம் வெளியான தேதி: 11.12.2024
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 11.12.2024
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 31.12.2024
அட்மிட் கார்டின் வெளியீட்டு தேதி: மார்ச் 2025
தேர்வு தேதி:13.04.2025
தேர்வு முடிவு அறிவிப்பு:மே 2025
இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.