இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகம்..வழங்கும் படிப்புகள்- முழு விவரம்


இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகம்..வழங்கும் படிப்புகள்- முழு விவரம்
x
தினத்தந்தி 16 Dec 2024 6:45 AM IST (Updated: 16 Dec 2024 10:57 AM IST)
t-max-icont-min-icon

பல்கலைக் கழகத்தோடு இணைந்து 2 கவின் கலை அரசுக்கல்லூரிகள் இயங்குகின்றன.

2013 ஆம் ஆண்டு இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் -தமிழ்நாடு மியூசிக் அண்ட் பைன் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம்(TAMIL NADU MUSIC AND FINE ARTS UNIVERSITY)ஆகும்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் நமது மரபுகளை பாதுகாக்கும் விதத்தில் இந்திய இசை, பரதநாட்டியம், நுண்கலைகள் மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றில் பயிற்சிகள் வழங்கும் விதத்தில் பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்பல்கலைக்கழகம்சென்னையில்இயங்குகிறது.

இங்கு -

*எம்.ஏவாய்ப்பாட்டு

*எம்.ஏநாதஸ்வரம்

*எம்.ஏவீணை

*எம்.ஏவயலின்

*எம்.ஏமிருதங்கம்

*எம்.ஏபரதநாட்டியம்

*எம்.எப்.ஏஇன்பெயிண்டிங்.

*எம்.எப்.ஏஎன் விசுவல் கம்யூனிகேஷன்டிசைன்.

*எம்பில்.இன்மியூசிக்,பரதநாட்டியம்அண்ட்பைன்ஆர்ட்ஸ்

*பி.எச்.டி(Ph.D )ஆகியபடிப்புகள்நடத்தப்படுகின்றன.

அரசுஇசைக்கல்லூரிகள்

இந்தப் பல் கலைக் கழகத்தோடு இணைந்து, அங்கீகாரம் பெற்று பல இசைக் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்குகின்றன. அந்தக் கல்லூரிகள் பற்றிய விவரம்:

1. தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, சென்னை.

2. தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, மதுரை.

3. தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, கோயம்புத்தூர்.

4. தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி ,திருவையாறு.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் -

1. மூன்றாண்டு பட்டயபடிப்பு

2.இரண்டு ஆண்டுபட்டயபடிப்பு

3.ஓராண்டு பட்டையபடிப்பு

4. மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு(B.A. Degree)

5. மாலை நேர இசை கல்லூரி படிப்பு

- என பல்வேறு பாடப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மூன்றாண்டு பட்டயப்படிப்பில்- குரல் இசை, வீணை ,வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில் மிருதங்கம், கடம், கஞ்சிரா, முகர்சிங், பரதநாட்டியம், நட்டுவாங்கம், நாட்டுப்புறக்கலை ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. இந்தப் பட்டயப்படிப்பில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்துபடிக்கலாம். ஆனால், இந்த பயிற்சியில் சேர 16 முதல்21 வயதுக்குள் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பில், நட்டு வாங்கம் பயிற்சி வழங்கப்படுகிறது இந்தப்படிப்பில் சேர,பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.இசைக்கலை மணி பட்டயம் (பரதநாட்டியம்) அல்லது பரதநாட்டியத்தில் பட்டம் பெற்றிருக்கவேண்டியது அவசியம் ஆகும். இந்த பயிற்சியில் சேர 16 முதல் 21 வயதுக்குள் இருக்கவேண்டியது அவசியமாகும்.

ஓராண்டு பட்டயப்படிப்பில்-இசை ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த படிப்பிலும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை இசை பட்டம் பெற்றவர்கள் இசைபட்டயம்அல்லது இசையில் அதற்கு நிகரான பட்டயம் பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். 16 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேர்ந்துகொள்ளலாம்.

மூன்றாண்டு இளங்கலைபட்டப்படிப்பில் (B.A. Degree)குரலிசை, வீணை, வயலின்,பரதநாட்டியம் ஆகிய முதன்மை பாடங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்தபட்டப் படிப்பில்சேர, பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இந்த படிப்பில் சேர17 முதல்22 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்துபடிக்கும் விதத்தில் மாலை நேர இசைகல்லூரியும் இங்கு இயங்குகிறது. இதில்,இரண்டு ஆண்டு சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. குரலிசை,வீணை, வயலின் மற்றும் மிருதங்கம் ஆகியவற்றில்பயிற்சிகள் வழங்கப்படும். 16வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியை போலவே, மதுரை,கோயம்புத்தூர்,திருவையாறு ஆகிய இடங்களில் இயங்கும் இசைகல்லூரிகளிலும் பல்வேறு இசைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அரசு கவின் கலைக் கல்லூரிகள்

இந்தப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து 2 கவின் கலை அரசுக்கல்லூரிகள் இயங்குகின்றன. அவைபற்றியவிவரம் :

அரசுகவின்கலைக்கல்லூரி,

31,ஈவேராபெரியார்நெடுஞ்சாலை,

பெரியமேடு,

சென்னை-600 003.

இங்கு ,

1.வண்ணக்கலை

2.சிற்பக்கலை

3.காட்சி வழி தொடர்புவடிவமைப்பு

4. ஆலையக துகிலியல் வடிவமைப்பு

5.ஆலையக சுடுமண் வடிவமைப்பு(DESIGN IN CERAMIC),

6.பதிப்பு ஓவியம் (PRINT MAKING)

-ஆகியகலைகளில் இளங்கவின் கலைபட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில்பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்துபடிக்கலாம். இருப்பினும் கொள்குறிவகை எழுத்துதேர்வு, செயல்முறை தேர்வுமற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதைப் போலவே, முதுகவின்கலை, (எம்.எப்.ஏ) என்னும் பட்ட மேற்படிப்பும் இங்குநடத்தப்படுகிறது. இந்தப்படிப்பில் இளம் கவின்கலை பி.எப்.ஏ அல்லது அதற்கு இணையான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும். இந்தப்படிப்பில் சேரவும் செயல் முறை தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு ஆகிய தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

அரசு கவின் கலைக் கல்லூரி,

மேலக்காவிரி

அஞ்சல்,

கும்பகோணம்-612 002.

இந்தக்கல்லூரியிலும் 4 ஆண்டு இளங்கவின் கலைபட்டப்படிப்புநடத்தப்படுகிறது. இந்தபட்டப்படிப்பு வண்ணக்கலை சிற்பக்கலைகாட்சி வழிதகவல் தொடர்வடிவமைப்பு ஆகிய பாடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், இங்கு முதுகவின்கலை எம்.எப். ஏஎன்னும் 2 ஆண்டு பட்ட மேற்படிப்பும் நடத்தப்படுகிறது.

அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி இந்தப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடைபெறும் மற்றுமொறு கல்லூரி,மாமல்லபுரத்தில் இயங்குகிறது. கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலை சம்பந்தப்பட்ட படிப்புகளை நடத்தும் இந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியாகும்.

இந்தக் கல்லூரியின் முகவரி:

அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி,

மாமல்லபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம்-603 104.

இங்கு நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. அவை-

1.தொழில்நுட்பவியல்இளையர்மரபுக்கட்டடக்கலைபட்டம்

இந்தப்படிப்பில்சேரபிளஸ் 2தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக கணித பாடத்தை படித்திருக்கவேண்டும். 23வயதுக்குள் உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

2.கவின்கலை இளையர் மரபு சிற்பக்கலை பட்டம்

இந்த பட்டப் படிப்பு கற்சிற்பம்,சுதைசிற்பம், மரச்சிற்பம் மற்றும் உலோகச் சிற்பம் ஆகிய சிறப்பு பாடங்களில் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். ஆனால், அவர்கள் 23வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

3.கவின்கலை இளையர் மரபு ஓவியமும் வண்ணம்-பட்டம்

இந்தப் பட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

அரசு உதவி பெறும் நுண்கலை கல்வி நிறுவனங்கள்

அரசு உதவி பெறும் 2 கல்வி நிறுவனங்கள் நுண்கலைப் படிப்பை வழங்கி வருகின்றன.அவை பற்றிய விபரம்:

1. கலைக்காவேரிநுண்கலைக்கல்லூரி, திருச்சி-620001.

2. ஸ்ரீசத்குருசங்கீதவித்யாலயம், மதுரை-625 002.




Next Story