ரெயில்வேயில் வேலை - 3,445 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
ரெயில்வே துறைகளில் அவ்வப்போது காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில், ரெயில்வேயில் காலியாக உள்ள 3445 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 3445
பணி விவரம்: கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க், கணக்கு எழுத்தர் - டைபிஸ்ட், ஜூனியர் கிளார்க் - டைபிஸ்ட் & டிரெயின் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: 12ம்- வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
தேர்வு முறை: கணிணி வழி எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே
விண்ணப்பிக்கும் கால அவகாசம் : 21.09.2024 முதல் 20.10.2024 வரை
மேலும் விண்ணப்ப அறிவிப்பினை தெரிந்து கொள்ள: https://www.rrbchennai.gov.in/