கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு கால பட்டய வகுப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு


கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு கால பட்டய வகுப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு
x

கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான ஓராண்டு கால பட்டய வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

சென்னை,

கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான ஓராண்டு கால பட்டய வகுப்பில் சேர்வதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2025 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழுநேரம்) நேரடியாக ஓராண்டு காலம் நிறுவனத்தில் நடத்தப்பெறும்.

இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வகுப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்புத் தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. விண்ணப்ப கட்டணம் ரூ.100/- + சேர்க்கைக் கட்டணம் ரூ.3000/- + அடையாள அட்டை ரூ.150/- மொத்தம் ரூ.3250/- செலுத்த வேண்டும்.

கட்டணத்தை The DIRECTOR, International Institute of Tamil Studies எனும் பெயரில் வங்கி வரைவோலையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும் அல்லது நேரடியாக அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பம் செய்திடலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2024 டிசம்பர் 30-ந்தேதி மாலை 5.00 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் நிறுவன வலைதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலகவளாகம், தரமணி, சென்னை–600113. தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்: 044-22542992, 9500012272. மின்னஞ்சல் : iitstaramani@gmail.com வலைத்தளம் : www.ulakaththamizh.in"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story