உடல் இயக்க குறைபாடுகளை நீக்கும் மருத்துவம்; பிசியோதெரபி படிப்புகள் பற்றிய சில விவரங்கள்...


உடல் இயக்க குறைபாடுகளை நீக்கும் மருத்துவம்; பிசியோதெரபி படிப்புகள் பற்றிய சில விவரங்கள்...
x
தினத்தந்தி 17 Feb 2025 2:25 AM (Updated: 17 Feb 2025 2:31 AM)
t-max-icont-min-icon

பிசியோதெரபி படிப்பில் பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் மற்றும் டாக்டர் பட்ட படிப்புகள் என பலவித படிப்புகள் உள்ளன.

பிசியோதெரபி படிப்புகள்

"உடல் இயக்க மருத்துவம்" என அழைக்கப்படும் "பிசியோதெரபி" (PHYSIOTHERAPHY) என்னும் மருத்துவ படிப்பு இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை, இயக்க குறைபாடுகளை நீக்கும் வகையில் பிசியோதெரபி மருத்துவம் உதவியாக அமைகிறது. இதனை "இயன்முறை மருத்துவம்" என்றும் அழைக்கிறார்கள்.

சிலர், இதனை "உடற்கூற்று மருத்துவம்" என்றும் குறிப்பிடுவதுண்டு. மனிதர்கள் தங்களது உடல் உறுப்புகளை சிறப்பான முறையில் இயக்குவதற்கு இந்த மருத்துவம் மிகவும் உதவியாக அமைகிறது. விபத்தினால் ஏற்பட்ட காயங்கள், உறுப்புகளின் இயக்க முடக்கம், வயது முதிர்வு நோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்கு இந்த மருத்துவம் சிறந்த மருத்துவமாக கருதப்படுகிறது. வருமுன் காத்து கொள்ளுதல், தசைப்பிடிப்புக்கான சிறப்பான சிகிச்சை மற்றும் நரம்புகளில் ஏற்படும் பிரச்சனைகளினால் உருவாகும் உறுப்புகளின் செயல் இழப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிசியோதெரபி படிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனாடமி (ANATOMY), பிசியாலஜி (PHYSIOLOGY), பயோ மெக்கானிக்ஸ் (BIOMECHANICS), பாத்தாலஜி (PATHOLOGY) மற்றும் பலவித பாடங்களை உள்ளடக்கிய படிப்பாக பிசியோதெரபி படிப்பு உள்ளது. பொதுவாக, பிசியோதெரபி படிப்பில் பட்டப்படிப்புகள் (DEGREE COURSES), பட்ட மேற்படிப்புகள் (POST GRADUATE COURSES), டிப்ளமோ படிப்புகள் (DIPLOMA COURSES) மற்றும் டாக்டர் பட்ட படிப்புகள் என பலவித படிப்புகள் உள்ளன.

பட்டப்படிப்புகள் (DEGREE COURSES)

பிசியோதெரபி பட்டப்படிப்பில்

· BPT - Bachelor of Physio / Physical Therapy

· B.Sc in Physiotherapy

என படிப்புகள் உள்ளன.

பிசியோதெரபி பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க பிளஸ் 2 தேர்வில் அறிவியல் (SCIENCE) பாடப்பிரிவை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். அதாவது, இயற்பியல் (PHYSICS), வேதியியல் (CHEMISTRY), உயிரியியல் ஆகிய பாடங்களை படித்து தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படை தகுதியாக கருதப்பட்டாலும், நீட் (NEET) தேர்வு மதிப்பெண்கள் மற்றும் க்யூட் (CUET) தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பட்ட மேற்படிப்புகள் (POST GRADUATE COURSES)

பிசியோதெரபி பட்ட மேற்படிப்ப்பில்

· Master in Physiotherapy (MPT)

· M.Sc. in Physiotherapy

· Master of Physiotherapy (Neurology)

· Master of Physiotherapy in Sports Physiotherapy

· MPT Cardiorespiratory Course

· Master of Physiotherapy in Urology and Obstetrics

· Master of Physiotherapy in Pediatrics

· Master of Physiotherapy in Musculoskeletal

· M.D. in Physiotherapy

என படிப்புகள் உள்ளன.

பிசியோதெரபி பட்ட மேற்படிப்பில் சேர்ந்து படிக்க கண்டிப்பாக நீட் பிஜி (NEET-PG) நுழைவுத்தேர்வு மற்றும் க்யூட் பிஜி (CUET-PG) நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம் ஆகும்.

டிப்ளமோ படிப்பு (DIPLOMA COURSES)

பிசியோதெரபி டிப்ளமோ படிப்பில்

· Diploma in Physiotherapy

· PG Diploma in Sports Physiotherapy

என படிப்புகள் உள்ளன.

"டிப்ளமோ இன் பிஸியோதெரபி" (Diploma in Physiotherapy) என்னும் படிப்பில் சேர்ந்து படிக்க பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றால் போதும். குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து கொள்கிறார்கள்.

டாக்டர் பட்டப்படிப்பு

· PhD in Physiotherapy

பிசியோதெரபி படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்கள்

பிசியோதெரபி படிப்பை தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களும் இந்த படிப்பை சிறந்த முறையில் நடத்தி வருகின்றன.

அந்த கல்வி நிறுவனங்களின் விவரங்கள்,

· Adhiparasakthi College of Physiotherapy, Melmaruvathur, Kanchipuram.

· Annai Therasa Institute of Paramedical Sciences, Salem

· Bharani Swathi College of Physiotherapy, Chennai

· Cheran's College of Physiotherapy, Coimbatore

· Christian College of Physiotherapy, Colachel, Kanyakumari

· College of Physiotherapy, Christian Medical College, Vellore

· College of Physiotherapy, J.K.K. Munirajah Medical Research Foundation, Komarapalayam, Namakkal

· College of Physiotherapy, Sri Ramakrishna Institute of Paramedical Sciences, Coimbatore

· College of Physiotherapy, Trinity Mission and Medical Foundation, Madurai

· College of Physiotherapy, Vivekananda of Medical Science and Research, Tiruchengode, Namakkal

· Devendrar College of Physiotherapy, Tirunelveli

· Govt. College of Physiotherapy, tr, Trichy

· Govt. Institute of Rehabilitation Medicine, Chennai

· J.K. College of Nursing and Paramedicals, Coimbatore

· Jaya College of Paramedical Sciences, Tiruninravur, Tiruvallur

· K.G. College of Physiotherapy, Coimbatore

· K.M.C.H. College of Physiotherapy, Coimbatore

· Kamalam Viswanathan College of Physiotherapy, Trichy

· Kavimony College of Physiotherapy, Coimbatore

· Madha College of Physiotherapy, Chennai

· Maharaja College of Physiotherapy, Chennai

· Mannai Narayanswamy Paramedical College, Thanjavur

· Matha College of Physiotherapy, Manamadurai, Sivagangai

· Meenakshi University (Meenakshi College of Physiotherapy), Chennai

· Mohammed Sathak A.J. College of Physiotherapy, Chennai

· Mookambigai College of Physiotherapy, Chennai

· Nandha College of Physiotherapy, Erode

· P.P.G. College of Physiotherapy, Coimbatore

· P.S.G. College of Paramedical Sciences, Coimbatore

· Padmavathy College of Physiotherapy, Dharmapuri

· Pioneer College of Physiotherapy, Ramnad

· Shanmugha College of Physiotherapy, Salem

· Sri Gokulam Institute of Paramedical Sciences, Salem

· Tamilnadu Paramedical Institutions College of Physiotherapy, Chennai

· Thanthai Rover College of Physiotherapy, Trichy

· U.C.A. College of Physiotherapy, Chennai

· Vel R.S. Medical College, College of Physiotherapy, Chennai

· White Memorial College of Physiotherapy, Kanyakumari.


Next Story