மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் உதவி மேலாளர் பதவிக்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று ஜெனரல் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா. இந்த காப்பீட்டு நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்ஸ்சுரன்ஸ் காப்பரேஷன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் உதவி மேலாளர் பதவிக்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணிவிவரம்:
உதவி மேலாளர் (பொது) -18 லீகல் - 09 மனித வளம் (HR)- 06 என்ஜினியரிங் - 05 (மரைன் -1, ஏரோநெட்டிக்கல் -1, மெக்கானிக்கல் -1, சிவில் -1, எலக்ட்ரிக்கல் -1) ஐடி - 22 ,காப்பீட்டு தொகை கணக்கிடுபவர் (Actuary)-02 காப்பீடு - 20 ,மெடிக்கல் - 02 நிதி - 18
காலிப்பணியிடங்கள்: 110
கல்வி தகுதி:
உதவி மேலாளர்(பொது)- எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
சட்டம் (உதவி மேலாளர்) - இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். பார் கவுன்சிலில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
மனித வளம் (உதவி மேலாளர்)- ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் HRM / பணியாளர் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம். டெக்னிக்கல் சார்ந்த பணியிடங்களுக்கு தொழில் நுட்ப படிப்புகள் முடித்து இருக்க வேண்டும்.
கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 21 ஆண்டுகள்
அதிகபட்சம் 30 ஆண்டுகள்
சம்பளம்: ரூ.50,925 - ரூ.96,765
வயது தளர்வு:
ஒபிசி(OBC)3 ஆண்டுகள்
எஸ்சி, எஸ்டி(SC/ST) 5 ஆண்டுகள்
தேர்வு முறை: எழுத்து தேர்வு,குழு கலந்துரையாடல், நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி தேர்வு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.12.2024
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 05.01.2025
விண்ணப்பிக்கும் முறை:https://www.gicre.in/en/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.gicre.in/en/people-resources/career-en