தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை... யார் யார் விண்ணப்பிக்கலாம்?


தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை... யார் யார் விண்ணப்பிக்கலாம்?
x

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் கடல் வளங்களை உபயோகப்படுத்திக் கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்:

திட்ட விஞ்ஞானி III- 1 , திட்ட விஞ்ஞானி II-7 , திட்ட விஞ்ஞானி-34 , அறிவியல் உதவியாளர் பணி-45, தொழில்நுட்ப வல்லுநர்-19, திட்ட கள உதவியாளர்-10, திட்ட இளநிலை உதவியாளர்-12, ஆராய்ச்சி அசோசியேட்-6 ,மூத்த ஆராய்ச்சியாளர்-13 ,ஜூனியர் ரிசர்ச் பெலோ-5

காலிப்பணியிடங்கள்: 152

சம்பள விவரம்:

திட்ட விஞ்ஞானி III - ரூ. 78,000/- + HRA

திட்ட விஞ்ஞானி II - ரூ. 67,000/- + HRA

திட்ட விஞ்ஞானி - ரூ. 56,000/- + HRA

திட்ட அறிவியல் உதவியாளர் -ரூ. 20,000/- + HRA

திட்ட தொழில்நுட்ப வல்லுநர் -ரூ. 20,000/- + HRA

திட்ட கள உதவியாளர் - ரூ. 20,000/- + HRA

திட்ட இளநிலை உதவியாளர் -ரூ. 58,000/- + HRA

ஆராய்ச்சி அசோசியேட் -ரூ. 58,000/- + HRA

மூத்த ஆராய்ச்சியாளர்-ரூ. 42,000/- + HRA

ஜூனியர் ரிசர்ச் பெலோ -ரூ. 37,000/- + HRA

வயது வரம்பு :

குறைந்த பட்சம் 28 ஆண்டுகள்

அதிக பட்சம் 50 ஆண்டுகள் இது ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.

வயது தளர்வு:

எஸ்சி/எஸ்டி(SC/ST) 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்

கல்வி தகுதி:

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: https://www.niot.res.in/recruitment_details.php என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஓபிசி(OBC),மற்ற பிரிவினர்(Others) ரூ.600 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை

விண்ணப்பம் வெளியான தேதி:04.12.2024

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 04.12.2024

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:23.12.2024

இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story