சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்


சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
x
தினத்தந்தி 31 Dec 2024 10:37 AM IST (Updated: 31 Dec 2024 11:06 AM IST)
t-max-icont-min-icon

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் பங்குச்சந்தை சரிவுடன் காணப்படுகிறது.

அதன்படி, நிப்டி 126 புள்ளிகள் சரிவடைந்து 23 ஆயிரத்து 519 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 146 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 805 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 499 புள்ளிகள் சரிவடைந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 751 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

54 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 510 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

210 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 779 புள்ளிகளிலும், 19 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 670 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன.


Next Story