தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்


தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

அதன்படி, 364 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 588 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 816 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 759 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

1 ஆயிரத்து 176 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 42 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 314 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 591 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

344 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 683 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 976 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 752 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.


Next Story