உயர்வுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை


உயர்வுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை
x
தினத்தந்தி 19 Nov 2024 12:50 PM IST (Updated: 19 Nov 2024 12:55 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 298.90 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23,756.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1,008.05 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 78,347.06 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபத்தில் கைமாறி வருகின்றன. பஜாஜ் பின்சர்வ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை பின்தங்கி வர்த்தகமாகி வருகின்றன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 1,403.40 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,330.56 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, ஷாங்காய் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. நேற்று அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தன.


Next Story