சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - காரணம் என்ன?

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை,
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நாடுகள் மீது வர்த்தக ரீதியில் வரி விதிப்பை அதிகரித்து அறிவித்துள்ளார். குறிப்பாக, இறக்குமதி வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சீனா, கனடா மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரித்துள்ளது. இதற்கு இந்த நாடுகளும் பதிலடி கொடுத்து வருகிறது. அதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் வரியை அதிகரிக்க டிரம்ப் விரைவில் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளால் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, நாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளதால் இது பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, அமெரிக்க பங்குச்சந்தை நேற்று கடும் சரிவை சந்த்தது.
இந்நிலையில் , அமெரிக்க பங்குச்சந்தை சரிவு இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 14 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 442 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 160 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 955 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
340 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 47 ஆயிரத்து 888 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 14 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 10 ஆயிரத்து 954 புள்ளிகளிலும், 180 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 55 ஆயிரத்து 60 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.