ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை


ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை
x

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.

அதன்படி, நிப்டி 90 புள்ளிகள் ஏற்றம் பெற்று 24 ஆயிரத்து 547 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 340 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 186 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், 326 புள்ளிகள் ஏற்றம் கண்ட பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 22 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 203 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 500 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

44 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 857 புள்ளிகளிலும், 365 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 356 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story