தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.64,080 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,010-ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்றம் இறங்களைக் கண்டு வரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7,940க்கும், ஒரு சவரன் ரூ.63,520க்கும், விற்பனையானது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராம் ரூ.6,540க்கும், ஒரு சவரன் ரூ.53,320க்கும், விற்பனையானது. அதற்கு முன்பாக தொடர்ந்து நான்கு நாட்களாக சரிந்து வந்ததால் தங்கம் விலை இன்றும் சரிவை சந்திக்கும் என இல்லத்தரசிகள் எதிபார்த்த நிலையில், தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை சந்தித்து இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.
Related Tags :
Next Story