தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
சென்னை,
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இதையடுத்து கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏறுமுகத்தை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 4 நாட்களில் ரூ.1,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.