மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா
![மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38506073-manipure33.webp)
மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில் பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
இம்பால்,
மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவிடம் ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்கினார். மணிப்பூர் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்த மத்திய அரசுக்கு நன்றி என்று பிரேன் சிங் கூறியுள்ளார்.
மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்து வரும் நிலையில், மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வந்தநிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மெய்தி மறும் குக்கி இன மக்கள் இடையே நடைபெறும் வன்முறையில் பலரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story