செப்டம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்


September month Rasipalan
x

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத பலன்களை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி அன்புள்ளங்களே நீங்கள் அடிக்கடி சென்றதை நினைத்துக் கவலை கொள்பவர். அதனைவிடுத்து நிகழ்காலத்தை மட்டும் சிந்தித்து அதற்கேற்ப தங்கள் கடமைகளைச் செய்தாலே உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

சிறப்புப் பலன்கள்:

உத்யோகஸ்தர்கள் வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். தொடர்ந்து வரக் கூடிய வேலைகளை அந்த பொழுதில் முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். தேகம் பளிச்சிடும்.

வியாபாரிகள் அதிகமான விற்பனை கூடி தங்களுக்கு நல்ல லாபத்தை தாங்கள் எதிர்பார்க்கலாம். புதிய பொருள் ஒன்றை தாங்கள் விற்பனை செய்வதற்கு ஆயத்தமாவீர்கள். ஒரு சிலர் கிளைகள் துவங்கவும் செய்வர்.

குடும்பத் தலைவிகள் குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். தங்கள் சொல்லிற்கு மதிப்பு உண்டு.குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் சில விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவரது உடல் நலம் மேம்படும். தங்கள் மாதவிடாய் வலி வந்து போகும்.

கலைஞர்கள் திரைப்பட தொடர்பில் இருக்கும் வழக்கமாக உள்ள தொடர்புகள் தொடர்ந்து வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது முழுமையாக கவனமாகப் படித்துவிட்டு கையெழுத்திடுவது நல்லது.

மாணவர்கள் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்து வந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றி வாகையை சூடலாம். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது மிகவும் அபத்தமானது.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசி அன்புள்ளங்களே பெரியவர்களை போற்றுபவர் நீங்கள். அவர்களின் அனுபவ அறிவு நமக்குத் தேவை என கருதுபவர். அவர்களை உதாசீனம் செய்யாதவர்.

சிறப்புப் பலன்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் சமாதானமாக செல்வது நல்லது. எவரையும் எளிதாக நினைக்க வேண்டாம் அவர்களிடம் தேவையற்ற பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவு செய்வதற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வர். முதலில் செலவுகள் அதிகமாக இருந்தாலும் தங்களுக்கு இனி வருங்காலத்தில் அது ஒரு அடித்தளமாக அமைந்துவிடும்.

குடும்பத்தலைவிகள் சிக்கன நடவடிக்கையை எடுப்பீர்கள். இந்த கால கட்டத்தில் தங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். ஆதலால், செலவு செய்யும் போது தாங்கள் கவனமாகவும் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.

கலைஞர்கள் தாங்கள் நினைத்தப்படியே பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். பலப் பல படங்கள் ஒப்பந்தம் ஆகும். படத்திற்காக முன் பணம் கிடைக்கப் பெறும்.

மாணவர்கள் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் இன்பச் சுற்றுலாக்களுக்காக தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து அழைத்துச் செல்வர். தங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும்.

பரிகாரம்

முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்புள்ளங்களே நீங்கள் எப்போதும் யாரையும் எதிர்பார்க்காதவர். ஆதலால், உங்களுக்கு யாராலும் கவலை ஏற்படாது.

சிறப்புப் பலன்கள்:

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களுக்கு ஒரு சிலருக்கு சம்பள பாக்கித் தொகைகள் தாமதமாக வருபவர்களுக்கு இனி சீக்கிரம் வரவதற்குண்டான வேலைகள் நடக்கும். இனி மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்திற்காக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை குறித்த நேரத்தில் தாங்கள் அனுப்பி வைத்துவிடுவீர்கள்.

குடும்பத் தலைவிகள் கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.

கலைஞர்களுக்கு தங்கள் முயற்சியால் பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வருவதும், அதில் முக்கிய கதாபாத்திரமும் கிடைக்கும். கவலை வேண்டாம்.

மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். தேவையற்ற கெட்ட பெயர்களை வாங்காதீர்கள். அது உங்களது பெற்றோர்களுக்கும் கவலையைத்

பரிகாரம்

அங்காள அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

கடகம்

கடக ராசி அன்புள்ளங்களே தாய் தந்தையரைத்தான் தாங்கள் கடவுளாக போற்றுபவர். ஆதலால், அவர்களின் ஆசியால் எல்லாவற்றையும் பெற இயலும்.

சிறப்புப் பலன்கள்:

உத்யோகஸ்தர்கள் நீங்கள் எதிர்பார்த்த தொகை மற்றும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்தில் தங்களுக்கு வேலை கிடைக்கும்.

வியாபாரிகள் அதிகமான மூலப்பொருட்களை தாங்கள் கொள்முதல் செய்ய வெளியூரிலிருந்து வரவழைப்பீர்கள். அதனால் அதிகமான லாபத்தை ஈட்டுவீர்கள்.

குடும்பத் தலைவிகள் ஒரு முக்கியமான தொழில் முதலீட்டிற்காக தாங்கள் தங்கள் நகையை அடகு வைத்து தங்கள் கணவருக்கு தருவீர்கள். பின்பு நகைகளை மீட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் உண்டாகும். குடும்பத்துடன் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். இடுப்பில் வலி வந்து போகும்.

கலைஞர்கள் இந்த மாதம் குறிப்பாக கலைக்குரிய சுக்கிரன் பாதகமாக இருப்பதால் உங்கள் திறமைகளை அதிகரிக்கவும். எந்த வேடமாக இருந்தாலும் அதனை ஏற்று நடியுங்கள்.

மாணவ மணிகள் நல்ல துறையில் சேர வேண்டும் என்றால் தாங்கள் சற்று கூடுதல் உழைப்பினைப் போடுவது நல்லது. திரும்ப திரும்ப படிப்பது நல்லது.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

மற்ற ராசிகளுக்கான பலன்களை அறிந்துகொள்ள.. https://www.dailythanthi.com/monthly-horoscope


Next Story