ஸ்பார்க் 10 புரோ


ஸ்பார்க் 10 புரோ
x

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் டெக்னோ நிறுவனம் ‘ஸ்பார்க் 10 புரோ’ என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் டெக்னோ நிறுவனம், நிலவை ஆராய இந்தியா வெற்றிகரமாக அனுப்பிய சந்திரயான்-3 திட்டத்தைக் கொண்டாடும் விதமாக மூன் எக்ஸ்புளோரர் எடிசனாக 'ஸ்பார்க் 10 புரோ' என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கருப்பு-வெள்ளை கலந்த நிறம் கொண்டதாக வந்துள்ள இந்த போனில் 6.78 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரை பயன்படுத்தப் பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் எடுக்க வசதியாக இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. விரைவாக செயல்பட இதில் மீடியா டெக் ஹீலியோ ஜி 88 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

8 ஜி.பி. ரேம், 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.11,999.


Next Story