கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி ;தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது- தொண்டர்கள் உற்சாகம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
பெங்களூரு,
Live Updates
- 13 May 2023 8:36 AM IST
மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தற்போது மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது
- 13 May 2023 8:05 AM IST
தபால் வாக்கு
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது
- 13 May 2023 8:01 AM IST
வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
- 13 May 2023 7:57 AM IST
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி தேவையாகும். ஒட்டு மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 2,430 ஆண்களும், 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 10ம் தேதி நடந்த 73.19 சதவிகிதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் 13ம் தேதி (இன்று) எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் வாக்குகள் எண்ணும் பணி 8 மணிக்கு தொடங்குகிறது.