சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் பூண்டு


சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் பூண்டு
x

பூண்டை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மைகளை தரும்.

பூண்டில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட phytochemicals (பைட்டோ கெமிக்கல்ஸ்) உள்ளன. இதில் உள்ள Allicin (அலிஸின்) என்ற கந்தக வேதிப்பொருள் (Sulphur containing compound), இன்சுலின் திறம்பட செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த வேதிப்பொருள் தான் பூண்டில் உள்ள கார நெடிக்கும், கார சுவைக்கும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூண்டின் சர்க்கரை உயர்தல் குறியீடு ( Glycemic index) வெறும் 20 தான், அதனால் சர்க்கரை நோயாளிகள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பூண்டை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் பலன் அதிகம். ஏனென்றால் சமைக்கும்போது பூண்டில் நன்மைத் தரக்கூடிய Allicin (அலிஸின்) அளவு குறைந்துவிடுகிறது.

வயிற்றுப்புண் மற்றும் வயிறு எரிச்சல் உள்ளவர்களும், ரத்தம் உறையாமல் தடுக்கும் மருந்துகளை (Aspirin -ஆஸ்பிரின், Clopidrogel -கிலோபிடோகல்) உட்கொள்பவர்களும் அதிகமான அளவு பூண்டைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

பூண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், செலீனியம், துத்தநாகம் ஆகியவை இதில் அதிகம் உள்ளன. அது மட்டுமல்ல, பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்ட்டிமைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்ட்டிஆக்சிடென்ட் பண்புகள் ஆகியவையும் காணப்படுகிறது. பூண்டில் உள்ள நெடி தன்மைக்கு காரணமான அலிசின் என்ற பொருள், உடலின் கணையத்தின் செயல்பாட்டை தூண்டி இன்சுலின் சுரப்பதை அதிகரிக்க செய்கிறது. மேலும் இது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இன்சுலின் திறம்பட செயல்படவும் உதவுகிறது. பூண்டில் அஜோன் என்ற பிளேட்டிலேட் எதிர்ப்பு பொருள் இருக்கிறது.

இது ரத்தம் உறைதலுக்கான பண்புகளை கொண்டிருப்பதால் ரத்த உறைதலை அதிகப்படுத்தக்கூடிய மருந்துகளை (ஆஸ்பிரின், குளோபிட்ரோகல், வார்பாரின்) உட்கொள்பவர்கள் பூண்டை தவிர்ப்பது நல்லது. பூண்டில் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் பச்சையாகவே தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை நாம் சாப்பிடலாம்.

பூண்டில் உள்ள அலிசின் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இது ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்வதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நன்மைகள் உள்ள பூண்டை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.


Next Story