சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? முக்கிய காரணங்கள்


Fainting and shortness of breath for diabetic patients
x

சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும்போது இது ஒரு தீவிர மருத்துவ நிலையின் எச்சரிக்கை அறிகுறியாக கருதவேண்டும்.

சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு மயக்கம் வரும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மயக்கம் வர முக்கிய காரணங்கள் வருமாறு:-

1. இரத்த சர்க்கரை தாழ்நிலை (ஹைபோ கிளைசீமியா)

2. இரத்த சர்க்கரை அதிகரித்தல்.

3. நீரிழப்பு: வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது வேறு காரணங்களாலோ உடல் அதிகப்படியான நீரை இழக்கும் போது ஏற்படும் நிலை நீரிழப்பு என்று அழைக்கப்படுகிறது.

4. குறைந்த ரத்த அழுத்தம்.

5. உயர் ரத்த அழுத்தம்.

6. மீனியர் நோய்: இது ஒரு சமநிலை கோளாறு ஆகும். இதில் காதின் உட்பகுதியில் எண்டோலிம்ப் திரவம் அதிகம் சேர்வதால் காதுகளுக்குள் அழுத்தம் எற்படும். இந்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும் போது மூளைக்கு சமிட்ஞைகள் அனுப்பப்பட்டு தலை சுற்றல் ஏற்படுகிறது.

7. கழுத்து எலும்பு தேய்மானம்.

8. இருதய கோளாறு.

9. இரத்த சோகை.

10.இரத்தத்தில் அதிகமான அளவு கொழுப்பு (கொலஸ்ட்ரால்)

11. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை

12. உட்கொள்ளும் மாத்திரைகள் :(எ.கா) சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உபயோகிக்கும் மாத்திரைகள் (குறிப்பாக எஸ்ஜிஎல்2 இண்ஹிபிட்டர்ஸ்), சிப்ரோ ப்ளாக்சசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் ஸ்டேடின்ஸ், நரம்பு பாதிப்புக்காக பரிந்துரைக்கப்படும் பிரிகாபாலின், காபாபெண்டின், அமிடிரிப்டலின், டுலாக்சிட்டின் போன்ற மருந்துகள்.

எனவே, சர்க்கரை நோயாளிகள் மயக்கம் ஏற்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் உள்ளதா என கண்டறிந்து மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.

மூச்சுத் திணறல்

சர்க்கரை நோயாளிகள் அதிகம் நடக்கும்போதும், படிக்கட்டுகளில் ஏறும்போதும், ஓடும்போதும், அல்லது அதிக வேலை செய்யும்போதும் மூச்சுத் திணறல் ஏற்படுவது இயல்பானது. சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள் இருந்தாலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது. ஆனால் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும்போது இது ஒரு தீவிர மருத்துவ நிலையின் எச்சரிக்கை அறிகுறியாக கருதவேண்டும்.

மூச்சுத்திணறல் மருத்துவரீதியாக டிஸ்ப்னியா என்று அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது.

1.இரத்த சோகை.

2.உடல் பருமன்.

3.இதய நோய் - இதய தமனி நோய்(CAD),மாரடைப்பு, இதய செயலிழப்பு.

4.சிறுநீரக செயலிழப்பு.

5.நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD)

6.ஆஸ்துமா.

7. நிமோனியா போன்ற நுரையீரல் தொற்று

8. புற்றுநோய் பாதிப்பு.

9. மனநோய் ( ஹிஸ்டீரிக்கல் ஹைப்பர் வென்டிலேஷன்)

மூச்சுத்திணறல் ஏற்பட மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்று மருத்துவரிடம் கலந்தாலோசித்து உரிய பரிசோதனைகளை உடனே செய்துகொள்வது தேவையற்ற பதற்றத்தையும் பயத்தையும் போக்க உதவும்.


Next Story