உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா அணிக்காக புதிய சாதனை படைத்த மெஸ்ஸி...!


உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா அணிக்காக புதிய சாதனை படைத்த மெஸ்ஸி...!
x

Image Courtesy: FIFA World Cup

தினத்தந்தி 22 Nov 2022 4:25 PM IST (Updated: 22 Nov 2022 4:34 PM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி வலைக்குள் திணித்து முதல் கோலை பதிவு செய்துள்ளார்.

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணிகே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணித்திருந்ததை போல அந்த அணி ஆட்டத்தின் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனாடி வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி அபாரமாக வலைக்குள் திணித்து முதல் கோலை பதிவு செய்தார். முதல் பாதி ஆட நேர முடிவில் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த உலக கோப்பையில் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக முதலாவது கோலை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் அர்ஜென்டினா அணிக்காக அபார சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடரில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக 2006, 2014, 2018 மற்றும் 2022 உலக கோப்பை தொடரில் கோலை பதிவு செய்துள்ளார்.




Next Story