உக்ரைனில் நோக்கங்கள் அடையப்படும் - ரஷிய அதிபர் புதின்


உக்ரைனில் நோக்கங்கள் அடையப்படும் - ரஷிய அதிபர் புதின்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 25 Nov 2022 10:28 PM GMT (Updated: 26 Nov 2022 1:26 AM GMT)

உக்ரைனில் நோக்கங்கள் அடையப்படும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 276-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷிய வீரர்களில் 17 பேரின் தாயாரை அதிபர் புதின் நேரில் சந்தித்தார். அப்போது புதின் பேசுகையில், இந்த வழியை நான் தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த தலைமையும் ஏற்றுக்கொள்கிறது. உக்ரைனில் நாம் நமது இலக்கை அடையவேண்டும். இறுதியில் நமது இலக்கை நாம் அடைவோம்' என்றார்.


Next Story