விரத நாட்கள்- 2024
விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள்.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், ஆன்மிக காரியங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, பிரதோஷம், சஷ்டி, ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் விரதம் இருப்பார்கள்.
விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன.
எல்லா விரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள்தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
முக்கிய விரத நாட்களில் விரதங்களைக் கடைபிடிக்கும் முறை பற்றி தெரிந்துகொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து நற்பலன்களைப் பெறலாம். அப்படி முக்கிய விரத நாட்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களுக்காக 2024-ம் ஆண்டில் விரத நாட்கள் குறித்த பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.