வேலை வாய்ப்பை அள்ளி தரும் சைபர் செக்யூரிட்டி படிப்புகள்: முழு விவரம்
இன்று உலகம் முழுவதும் சைபர் செக்யூரிட்டி பற்றிய படிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
'இண்டர்நெட்' எனப்படும் இணையதளத்தை இயங்கவிடாமலும், சேகரித்த தரவுகளையும், தகவல்களையும் அழிக்கும் முயற்சியிலும், மற்றவர்களோடு கொள்ளும் தொடர்பை தடுக்கும் வகையிலும், கண்ணுக்குத் தெரியாத சில பொருட்கள் இயங்குகின்றன. இவை மால்வோர் (Malware) ), ரான்சம்வோர் (Ransomware )பிஸ்ஸிங் (Phishing) ,சோஷியல் இன்ஜினியரிங் (Social Engineering) என்னும் பல்வேறு வடிவில் இணையத்தில் உலாவருகின்றன.
"மால்வோர்(Malware) எனப்படுவது தீமை விளைவிக்கும் ஒரு மென்பொருள் ஆகும். கம்ப்யூட்டாரில் வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களை இயங்கவிடாமல் செய்வதும், நெட்வொர்க்கில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய தொழிலாக அமைகிறது.
"ரான்சம்வோர் (Ransomware) என்பது கோப்புகள், பணம் செலுத்துதல் போன்றவற்றில் பிரச்சினைகளை உருவாக்கி தீமைவிளைவிக்கும் மென்பொருள் ஆகும்.
"பிஸ்ஸிங்" (Phishing) என்பது மின்னணுவியல் தகவல் தொடர்புகளில் ஊடுருவி நல்ல தரம்வாய்ந்த தரவுகளை பொய்மையாக்கி ஒரு தீமைதரும் உணர்ச்சிமிக்க தகவல்களை உருவாக்கிவிடுகிறது.
"சோஷியல் இன்ஜினியரிங்" (Social Engineering) என்பது ரகசியமான தகவல்களை இணையத்தின் உள்ளே புகுந்து, சில பல மாற்றங்களை உருவாக்கி அதனை எல்லோருக்கும் தெரியும்படி செய்துவிடுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள தீமை பயக்கும் மென்பொருள்களின் தாக்குதலில் இருந்து தொழில்நுட்பங்கள், செயல்முறைகள், கொள்கைகள் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் சைபர் செக்யூரிட்டி என அழைக்கப்படுகிறது. இதனை இணையதள பாதுகாப்பு என்றும் அழைப்பார்கள்.
இணையதள தாக்குதலினால் உருவாகும் திருட்டு,பண இழப்பு மற்றும் அழிவுகள் ஆகியவற்றை தடுத்து தனிமனிதர்களுக்கும் வணிக தொழில் நிறுவனங்களுக்கும் மிக உதவியாக அமைவதுதான் இந்த "சைபர் செக்யூரிட்டி" ஆகும்.
சைபர் செக்யூரிட்டி பற்றிய படிப்புகள்
இன்று உலகம் முழுவதும் சைபர் செக்யூரிட்டி பற்றி படிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. எதிர்காலத்தில் கம்ப்யூட்டரிலும், இணையதளத்திலும் சேமித்து வைத்த தகவல்களை மிக கவனத்துடன் பாதுகாக்க இந்தப்படிப்புகள் மிகவும் உதவியாக அமைகிறது.
1.Advanced Executive Program in Cyber security
2.Assets, Threats, and Vulnerabilities
3.Automate Cyber security Tasks with Python
4.CEH (v12)- Certified Ethical Hacker
5.Chief Information Security Officer
6.CISSP®- Certified Information Systems Security Professional
7.CompTIA Security+
8.Computer forensics
9.Connect and Protect: Networks and Network Security
10.Cryptography
11.Cyber Security Expert
12.Cyber security for Everyone
13.Cyber Security Manager
14.Cyber security with GenAI Advanced Program
15.Cyber security Specialization Course
16.Digital forensics
17.Ethical hacking
18.Executive Certificate Program in Cyber security
19.Foundation Program in IT Infrastructure and Security
20.Foundations of Cyber security
21.Incident responders
22.Information security
23.Introduction to cyber security
24.Malware
25.Network security
26.Owasp top 10: injection attacks
27.Penetration testing
28.PGP in Cyber Security and SecOps
29.Play It Safe: Manage Security Risks
30.Post Graduate Program in Cyber Security
31.Python
32.Regulatory compliance
33.Risk management
34.Security Administration
35.Security Consultant
36.Security Engineer
37.Sound the Alarm: Detection and Response
38.Tools of the Trade: Linux and SQL
சைபர் செக்யூரிட்டி பட்டப்படிப்புகள்
சைபர் செக்யூரிட்டி சம்பந்தப்பட்ட பட்டப் படிப்புகளாக-
1. பி டெக் இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் சைபர் செக்யூரிட்டி (B.Teh in Computer Science and Cyber Security).
2. பிஎஸ்சி யின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் சைபர் செக்யூரிட்டி (B.Sc in Computer Science and Cyber Security)
---ஆகிய படிப்புகள் உள்ளன. இந்த படிப்பில் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம்
பி. டெக் இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் சைபர் செக்யூரிட்டி படிப்பு நான்கு ஆண்டுகள் படிப்பாகும். பி.எஸ்சி இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் சைபர் செக்யூரிட்டி படிப்பு மூன்று ஆண்டுகள் படிப்பாகும். இந்தப் படிப்புகளில் பிளஸ் டூ தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் சிறப்பான வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம்.
இதேபோல், வணிகவியல் படிப்பை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து படித்த மாணவ மாணவிகள் சேர்ந்து படிக்கும் விதத்தில் பி.காம் இன் சைபர் லா ( B.Com in Cyber Law )என்ற படிப்பும் சில கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகிறது
சைபர் செக்யூரிட்டி படிப்பில் டிப்ளமோ படிப்புகளும் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
யாரெல்லாம் படிக்கலாம்…?
சைபர் செக்யூரிட்டி சம்பந்தப்பட்ட படிப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம். குறிப்பாக - சாப்ட்வர் டெவெலப்பர்ஸ் (Software Developers), சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர்ஸ் (System Administrators) மற்றும் பிசினஸ் அனலிஸ் (Business Analysis) போன்ற பதவி வகிப்பவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கிளவுட் கம்பியூட்டிங் சான்றிதழ் படிப்புகள் மிகவும் உதவியாக அமையும்.
என்னென்ன பதவிகள்?
சைபர்செக்யூரிட்டி துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒருவரது கல்வித்தகுதி, சிறப்புத்திறன், பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படுகின்றன.
சைபர்செக்யூரிட்டி துறையிலுள்ள பதவிகள் பின்வருமாறு:
Cyber security analyst
Assistant Manager (Information Security)
Career Opportunity For VAPT Professionals-Mumbai Location
CISO (Chief Information Security Officer)
Cloud Security Practitioner
Cyber defense analyst
Cyber Risk Analyst I – Sophos Managed Risk
Cyber Security Analyst
Cyber Security Analyst - Wipro
Implementation Practitioner
Information Security - Intern
Information security analyst
IT security analyst
Jr. Information Security Assistant
Junior Security Engineer, Information Security
Manager - Information Security
Penetration Tester
Regional Information Security Manager
Security analyst
Security Architect
Security Consultant (Penetration Tester)
Security Operations Center Analyst
Security Solutioning Architect
Senior Manager – Cyber Security
SOC analyst
வேலைவழங்கும் நிறுவனங்கள்
சைபர் செக்யூரிட்டி படிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமேசான், மைக்ரோசாப்ட், லிங்க்டுஇன், ஐபிஎம், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விஎம்வோ;, சிஸ்கோ போன்ற உலக அளவில் பிரபலமான நிறுவனங்கள் உடனடி வேலைவாய்ப்பை வழங்குகின்றன.