தமிழகத்தில் ஓமியோபதி படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை...? இதோ விவரம்
தமிழகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
சென்னை,
பட்டப்படிப்புகள்
B.A.M.S. (Bachelor of Ayurvedic Medicine and Surgery)
''ஆயுர்வேதம்" என்பதற்கு "உயிர் அறிவு" என்றும் "வாழ்க்கை விஞ்ஞானம்" என்றும் பொருள் கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற B.A.M.S. படிப்பு படிக்க வேண்டும். B.A.M.S. என்பது "Bachelor of Ayurvedic Medicine and Surgery" என்பதைக் குறிக்கும்.
இந்த B.A.M.S. படிப்பு (5 1/2 ஆண்டு படிப்பு + ஓராண்டு பயிற்சி) படிப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
தமிழகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் விவரம்:-
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
1. அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
சுயநிதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்
1. ஆயுர்வேத கல்லூரி, 242, திருச்சி ரோடு, சூலூர், கோயம்புத்தூர் - 641 402.
2. தர்மா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதூர் - 602 105.
3. இம்மானுவேல் அரசர் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி, மார்த்தாண்டம், கன்னியாகுமாரி மாவட்டம் - 629 195.
4. மரியா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவட்டார், கன்னியாகுமாரி மாவட்டம் - 629 177.
5. நந்தா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவனை, பிச்சாண்டம்பாளையம், ஈரோடு மாவட்டம் - 638 052.
6. ஸ்ரீசாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அன்ட ரிசர்ச் சென்டர், மேற்கு தாம்பரம், சென்னை - 600 044.
B.H.M.S. (Bachelor of Homoeopathic Medicine and Surgery)
ஓமியோபதி மருத்துவராக விரும்புபவர்கள் படிக்கவேண்டிய படிப்பு "B.H.M.S." படிப்பாகும். "B.H.M.S." என்பது "Bachelor of Homeopathic Medicine and Surgery" என்பதைக் குறிக்கும். இந்த B.H.M.S.படிப்பு 5 1/2 வருடப் படிப்பாகும்.
இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
பட்ட மேற்படிப்பாக (Post Graduate Degree Course) M.D. Homoeopathy என்ற படிப்பு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி
1. அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருமங்கலம்-626 706, மதுரை மாவட்டம்.
தமிழகத்தில் உள்ள சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்
1. டாக்டர் ஹனேமன் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி அன்ட் ரிசர்ச் சென்டர், கோனேரிப்பட்டி, ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் - 627 408
2. எக்ஸெல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி, குமாரப்பாளையம், நாமக்கல் மாவட்டம்.
3. மாரியா ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவட்டார், கன்னியாகுமாரி மாவட்டம் - 629 177.
4. மார்ட்டின் ஓமியோபதி மருத்துவக்கல்லூரி, கோயம்புத்தூர் - 641 029
5. எஸ்.வி.எஸ். ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி - 626 209, விழுப்புரம் மாவட்டம்.
6. ஆர்.வி.எஸ். ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, சூலூர், கோயம்புத்தூர் - 641 402
7. சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, குலசேகரம், கன்னியாகுமரி - 629 161.
8. ஸ்ரீ பரணி ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் - 638 007.
9. சிவராஜ் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி அன்ட் ரிசர்ச் சென்டர், சித்தர் கோவில் ரோடு, பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்- 636 006
10. ஸ்ரீசாய்ராம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மேற்கு தாம்பரம், சென்னை - 600 044
11. வெங்கடேஷ்வரா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, காரம்பாக்கம், போரூர், சென்னை - 600 116.
12. ஒயிட் மெமோரியல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, ஆத்தூர், வையனூர் அஞ்சல், ஆத்தூர் -629 177, கன்னியாகுமரி மாவட்டம்
B.N.Y.S. (Bachelor of Naturopathy and Yogic Sciences)
"இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல்"என்னும் படிப்பு புதிய மருத்துவ பட்டப் படிப்பாகும். இதனை ஆங்கிலத்தில் "Bachelor of Naturopathy and Yogic Sciences" (B.N.Y.S.) என அழைப்பார்கள்.
பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களைப் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இயற்கை மருத்துவம் இன்று பலராலும் விரும்பப்படுவதால் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பட்ட மேற்படிப்பாக (Post Graduate Degree Course) M.D. Yoga and Naturopathy என்ற படிப்பு நடத்தப்படுகிறது.
அரசு நேச்சுரோபதி கல்லூரி
1. அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையின் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106.
2.இண்டர்நேசனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் யோகா அன்ட் நேச்சுரோபதி மெடிக்கல் சயின்ஸ், செங்கல்பட்டு - 603 001.
சுயநிதி நேச்சுரோபதி கல்லூரிகள்
1. அன்னை நேச்சுரோபதி கல்லூரி மற்றும் யோகா சயின்ஸ், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் - 612 503.
2. ஆதி நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, குடியாத்தம், வேலூர் மாவட்டம் - 635 806.
3. எக்செல் மருத்துவக்கல்லூரி - நேச்சுரோபதி மற்றும் யோகா, குமாரப்பாளையம், நாமக்கல் மாவட்டம்.
4. ஜி.டி.என். மருத்துவக்கல்லூரி நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ் ஆராய்ச்சி மையம், ஜி.டி.என். நகர், திண்டுக்கல் மாவட்டம் – 624 005.
5. ஜே.எஸ்.எஸ். இன்ஸ்டிட்யூட் ஆப் நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்சஸ், மைசூர் சாலை, ஊட்டி - 643 001.
6. கொங்கு நேச்சுரோபதி அன்ட் யோகா மருத்துவக் கல்லூட்ரி, பெருந்துறை, ஈரோடு மாவட்டம் - 638 060.
7. கிருஷ்ணா நேச்சுரோபதி அண்ட் யோகா மருத்துவக் கல்லூரி, மணச்சநல்லூர், திருச்சி மாவட்டம்.
8. மதர் தெரசா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, இலுப்பூர் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் - 622 102.
9. நந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, பிச்சாண்டம்பாளையம், ஈரோடு மாவட்டம் - 638 052.
10. எஸ்.தங்கப்பழம் மருத்துவக்கல்லூரி நேச்சுரோபதி யோகிக் சயின்ஸ் சென்டர், வாசுதேவநல்லூர், சிவகிரி தாலுகா, தென்காசி மாவட்டம் - 627 760.
11. ஸ்ரீ இந்திரா கணேசன் இன்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நேச்சுரோபதி அன்ட் யோகா மருத்துவ கல்லூரி, மணிகண்டம், திருச்சி மாவட்டம் - 620 012.
12. சர் ஐசக் நியூட்டன் நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி, நாகப்பட்டினம் மாவட்டம் - 611 102.
13. சிவராஜ் நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, சித்தர் கோவில் ரோடு, பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் - 636 307.
14. ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகா நேச்சுரோபதி கல்லூரி, குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629 161
15. எஸ்.வி.எஸ். யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் நேச்சுரோபதி ஆராய்ச்சி மையம், சேலம் மெயின் ரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் - 626 202
16. சுவாமி விவேகானந்தா நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, சங்ககிரி தாலுகா, சேலம் மாவட்டம் - 637 303.
B.S.M.S. (Bachelor of Siddha Medicine and Surgery)
சித்த மருத்துவத்தில் பட்டம் பெற தனியாக சித்த மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். பி.எஸ்.எம்.எஸ். என்பது சித்த மருத்துவம் சார்ந்த படிப்பு ஆகும். B.S.M.S. என்பது "Bachelor of Siddha Medicine and Surgery" என்பதைக் குறிக்கும்.
இது 5 வருடப் படிப்பாகும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். பட்ட மேற்படிப்பாக (Post Graduate Degree Course) M.D. Siddha (Siddha Maruthuva Perarignar)என்ற படிப்பு நடத்தப்படுகிறது.
அரசு சித்த மருத்துவ கல்லூரிகள்
1. அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002
2. அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம்,சென்னை - 600 106.
3. நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் சித்தா, தாம்பரம், சென்னை - 600 047
சுயநிதி சித்த மருத்துவக் கல்லூரிகள்
1. அகில திருவிதாங்கூர் சித்த மருத்துவக் கல்லூரி, ஆனந்த் ஆஸ்ரமம், முஞ்சிறை, புதுக்கடை, கன்னியாகுமரி மாவட்டம் - 629 171.
2. அன்னை மருத்துவக்கல்லூரி சித்தா மற்றும் ஆராய்ச்சி மையம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் - 612 203.
3. எக்செல் சித்தா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், குமாரப்பாளையம், நாமக்கல் மாவட்டம்.
4.ஜே.எஸ்.ஏ. மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், உளுந்தூர்பேட்டை தாலுகா, விழுப்புரம் மாவட்டம் - 606 104.
5. மரிய சித்தா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவட்டார், கன்னியாகுமாரி மாவட்டம் - 629 172.
6. நந்தா சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பிச்சாண்டம்பாளையம், ஈரோடு மாவட்டம் - 638 052.
7. ஆர்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி, குமரன்கோட்டம், திருச்சி ரோடு, கண்ணம்பாளையம், கோயம்புத்தூர் - 641 402.
8. சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரி, சித்தர் கோவில் மெயின் ரோடு,பெருமாம்பட்டி அஞ்சல்,சேலம் - 636 307.
9. சர் ஐசக் நியுட்டன் சித்த மருத்துவக் கல்லூரி, பாப்பாக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் - 611 102.
10. ஸ்ரீ இந்திரா கணேசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் - சித்த மருத்துவக் கல்லூரி, திருச்சி - 602 012.
11. சுதா சசீந்திரன் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, களியக்காவிளை, கன்னியாகுமாரி மாவட்டம் - 629 153.
12. ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், மேற்கு தாம்பரம், சென்னை - 600 044.
13. வேலுமயிலு சித்த மருத்துவக்கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் - 602 105, காஞ்சிபுரம் மாவட்டம்.
B.U.M.S. (Bachelor o Unani Medicine and Surgery)
B.U.M.S. என்ற யுனானி மருத்துவம் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு "Bachelor of Unani Medicine and Surgery" என்பதைக் குறிக்கும். சென்னையிலுள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் வெற்றிபெற்று "அப்சல் உல் இல்மா அரபிக்" (Afzal Ul Ilma Arabic) என்னும் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்தப் படிப்பு தமிழ்நாட்டில் ஒரே ஒரு கல்லூரியில் மட்டுமே நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு,
1.யுனானி அரசு மருத்துவக் கல்லூரி,அரும்பாக்கம், சென்னை-600 106.